/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
/
புதுச்சேரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
புதுச்சேரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
புதுச்சேரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
ADDED : ஆக 26, 2025 06:51 AM

புதுச்சேரி :  புதுச்சேரி தில்லையடி வள்ளிம்மை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை சிறப்பிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு, தேசிய நல்லாசிரியர் விருது  வழங்கி வருகிறது.
இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுச்சேரி, கதிர்காமம்  தில்லையாடி வள்ளியம்மை பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன்,48: தேர்வாகியுள்ளார். பள்ளி வளர்ச்சி, மாணவர் வளர்ச்சி, சமுதாய வளர்ச்சியை ஒருங்கிணைந்து முன்னிறுத்திய அவருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு கரையாம்புத்துார் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை துவங்கிய இவர், பசுமை வளர்ப்பில் மிகவும் ஆர்வம் கொண்டு இதுவரை, 2,625 மரக்கன்றுகள் நட்டுள்ளார். 1,565 விதை பந்துகளை துாவியுள்ளார். ஆண்டிற்கு இருமுறை ரத்ததானம் செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளாக ரத்ததான முகா மையும் நடத்தி வருகிறார்.
பசுமை துாய்மை, சிந் தனை துளிகள் என்ற இரு நுால்களையும் அவர் எழுதியுள்ளார். மேலும், அரபிந்தோ சொசைட்டியுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளார்.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இது மாணவர்களுக்கு கல்வி புகட்ட உந்து சக்தியை அளிக்கின்றது. இந்த விருதினை புதுச்சேரி அரசு, பள்ளி கல்வித் துறை, ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தினருக்கு சமர்பிக்கின்றேன் என்றார்.
கடந்த 2022ம் ஆண்டிற்கு பிறகு புதுச்சேரிக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

