/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய் மர்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டி தமிழகத்தை வீழ்த்தியது புதுச்சேரி அணி
/
விஜய் மர்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டி தமிழகத்தை வீழ்த்தியது புதுச்சேரி அணி
விஜய் மர்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டி தமிழகத்தை வீழ்த்தியது புதுச்சேரி அணி
விஜய் மர்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டி தமிழகத்தை வீழ்த்தியது புதுச்சேரி அணி
ADDED : டிச 26, 2024 05:49 AM

புதுச்சேரி: சிறுவர்களுக்கான விஜய் மர்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 3 நாள் விஜய் மர்சண்ட் கோப்பைக் கான கிரிக்கெட் போட்டி கள் நடந்து வருகிறது.சூரத் நகரில் கடந்த 22ம் தேதி துவங்கிய போட்டியில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின.
தமிழக அணி டிக்ளர்
முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 210 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் ஹரி பிரசாத் 5 விக்கெட் எடுத்தார்.
பின்னர், முதல் இன்னிங்சை துவங்கிய புதுச்சேரி அணி 69 ரன்களுக்கு சுருண்டது. 141 ரன்கள் முன்னிலையில் இருந்த தமிழ்நாடு அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழந்து 137 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
சாதித்த புதுச்சேரி
279 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய புதுச்சேரி அணி முதல் விக்கெட்டை இழந்த நிலையில், ஜீவித்ஷன் - சைலேஷ் சிறப்பாக ஆடி 122 ரன்கள் சேர்த்தனர். ஸ்கோர் 142 இருந்த நிலையில் சைலேஷ் 63 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்பு, ஆஹில் கச்ரு - ஜீவித்க்ஷன் ஜோடி பொறுப்புடன் ஆடி 89 ரன்கள் எடுத்தனர். 98 ரன்களில் ஜீவித்ஷன் ஆட்டம் இழந்தார்.
பின்னர், ஆஹில் கச்ரு- சந்துரு ஜோடி சிறப்பாக ஆடி புதுச்சேரி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். ஆட்டம் இழக்காமல் ஆஹில் கச்ரு 59 ரன்களும், சந்துரு 21 ரன்களும் எடுத்தனர்.
சி.ஏ.பி., பாராட்டு
மகத்தான வெற்றியை பதிவு செய்த புதுச்சேரி அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் (சி.ஏ.பி.,) தலைவர் தாமோதரன், செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.