sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்; ராமதாஸ் உறுதி

/

2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்; ராமதாஸ் உறுதி

2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்; ராமதாஸ் உறுதி

2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன்; ராமதாஸ் உறுதி

4


ADDED : ஆக 10, 2025 08:21 PM

Google News

4

ADDED : ஆக 10, 2025 08:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். நான் சொல்வது தான் நடக்கும்' என்று பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது; பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. அவர்களுக்கு ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, தீமைகளை அழிக்கும் சக்தி உண்டு. ஆண்களுக்கு என்ன சக்தி இருக்கிறது என்பதை நாமே எண்ணிப் பார்க்க வேண்டும். குரு உயிரோடு இருக்கும் போது, அவரை என் மூத்த பிள்ளை என்று சொல்வேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், எந்த அளவுக்கு சிறப்பாக நடத்துவாரோ, அதே அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம், பெரியகோவிலும். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் கோவிலும் தான்,' என்றார். இது அருமையான வார்த்தை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு


கல்வியில் பெண்கள் முதன்மையாக இருக்கிறார்கள். தொழில் செய்வதிலும் அவர்கள் முன்னோக்கி வருகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அப்படி செய்தால், தமிழகத்தில் இருக்கும் 320 சமுதாயங்கள், நாங்கள் யார்?, எங்களின் ஜனத்தொகை என்ன? எங்களின் வாழ்விடம் எப்படி இருக்கிறது?, சமூக நிலைமை என்ன? என்பது எல்லாம் தெரிய வரும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என் அருமை நண்பர் கருணாநிதி கொடுத்தார். 108 சமுதாயங்கள் பயன்பெற்றன. இப்போது, தந்தையை மிஞ்சிய தனயனாக நீங்கள், இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பை ஏன் எடுக்கக் கூடாது? பக்கத்து மாநிலங்கள் இந்தக் கணக்கெடுப்பை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஏன் தயக்கம்? ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இந்த சமூக சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மிகப்பெரிய போராட்டம்



10.5 இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே அதிரும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை செய்தால் தமிழகம் தாங்காது. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்வோம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் நடத்துவீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசுக்கு யோசனை


உங்கள் தெருவிலோ, வீட்டிலோ இருப்பவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இல்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் போராட்டம் நடத்துங்கள். என்னை கூப்பிட்டாலும் நான் அந்தப் போராட்டத்திற்கு வருகிறேன்.

ஒரு 3 மாதம் என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று கேட்க மாட்டேன். அது சாத்தியம் அல்ல. ஆனால், ஒரு 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்லும் யோசனைகளை கேட்டு நடவடிக்கையை எடுங்கள். இந்த சமூகத் தீமை உங்களால் ஒழிக்கப்படலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்து அதை செய்வோம் என்று சொல்வதை விட, சுலபமாக உங்களின் ஆட்சியில் செய்யலாம். அப்படி நடக்கவில்லையெனில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்த இரு தீமைகளையும் ஒழிப்போம்.

என் உயிரினும் மேலான...




இங்கு ரோடு நல்லா இருக்கிறது. இரவு நேரமாக உள்ளது, மணிக்கு 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாதீர்கள். உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது. மாநாடு முடிந்து செல்கையில் ஒரு சிறு விபத்து கூட நடக்கக்கூடாது. வேகமாகச் சென்று என்ன சாதிக்கப்போகிறோம்? என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள் ஜாக்கிரதையாக ஊருக்கு போய் சேருங்கள்.

2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வது தான் நடக்கும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us