/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லியில் டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
/
டில்லியில் டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
டில்லியில் டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
டில்லியில் டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு
ADDED : ஜன 13, 2026 06:46 AM

புதுச்சேரி: டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 39வது, தேசிய சப் ஜூனியர் டேக்வாண்டோ குறுகி மற்றும் பூம்சே போட்டிகள், இன்று துவங்கி 14 மற்றும் 15ம் ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில், புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், சி.என்.ஆர்., அரசு பள்ளி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, கேசவ் சங்கர வித்யாலயா பள்ளி, சாமிநாத வித்யாலயா பள்ளி, முருங்கப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, பி.எம்.ஸ்ரீ மறைமலை அடிகள் பள்ளி, காரைக்கால் யுனிவர்சல் அகாடமி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் பகவத்சிங் பயிற்சியாளர்கள் மிஸ்ரா, தேவானந்த், மேலாளர்கள் செல்வசுந்தரம், சத்திய ஸ்ரீதேவி, நடுவர் ஹரிஹரன் ஆகியோர் செல்கின்றனர். அவர்களை, டேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவன தலைவர் ஸ்டாலின், தொழிலதிபர்கள், சிவபிரகாசம், செந்தில்குமார், ரகு உட்பட சங்க நிர்வாகிகள், மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி ரயில் நிலையத்தில் வழிஅனுப்பி வைத்தனர்.

