sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செபக் டக்ரா போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

/

செபக் டக்ரா போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

செபக் டக்ரா போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

செபக் டக்ரா போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு


ADDED : மே 08, 2025 01:24 AM

Google News

ADDED : மே 08, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கேலோ இந்திய போட்டியில் செபக் டக்ரா போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணியின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் பீச் வாலிபால் செபக் டக்ரா விளையாட்டுகளில் புதுச்சேரி அணி பங்கேற்க உள்ளது.

இதில் செபக் டக்ரா விளையாட்டு போட்டிக்கான அணி தேர்வு முத்திரையர்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சிறந்த வீரர்களை நடுவர் குழுவினர் புதுச்சேரி அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்தனர்.

செபக் டக்ரோ விளையாட்டு துறை நடுவர்கள் கூறியதாவது: செபாக் டக்ரா தென்கிழக்கு ஆசியாவில் விளையாடும் விளையாட்டு. தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பிலிப்பீன்ஸில் சிபா, தாய்லாந்தில் டக்ரா, என விளையாட்டு அழைக்கப்படுகிறது.

இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. போட்டி விதிகள் வாலிபால் போன்றவை; ஆனால் கையால் பந்தை தொடமுடியாது. காலில் உதைத்து விளையாட வேண்டும்.

செபக் டக்ரா பிளாஸ்டிக் பந்து அல்லது பிரம்பு பந்து கொண்டு விளையாடப்படுகிறது.

இரண்டு அணிகள் ஒரே நேரத்தில் விளையாடும். ஓர் அணியில் மூன்று ஆட்டக்காரர்கள் இருப்பர்; ஒருவர் பின் பக்கம் இருப்பார், அவர் டெகொங் என்றழைக்கப்படுவார். மீதி இருவர் வலைக்கு அருகில் இருப்பார்கள்; இவர்கள் வலது உள்பக்கம், இடது உள்பக்கம் என்றழைக்கப்படுவார்கள். டெகொங் சர்விஸ் செய்வார்.

ஒரு பந்து உதைத்து வலை மேல் போய் வேறு அணி பக்கம் போகவில்லை எனில் அந்த அணி ஒரு பால்ட் பெறும்.

அந்த தப்பு செய்தால் எதிர் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். எந்த அணி முதலாக 21 புள்ளிகள் பெறுமோ அந்த அணி ஒரு செட்டில் வெற்றிபெறும்.

இரண்டு அணிகளும் செட் வெற்றிபெற்றால் டை பிரேக் செட் நடக்கும். இந்த செட்டில் எந்த அணி முதலாக 15 புள்ளிகள் பெறுமோ அந்த அணி போட்டியை வெற்றிபெறும்.

இந்த விளையாட்டு வாலிபால் போல் இருக்கும்' என்றனர்.






      Dinamalar
      Follow us