/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
ADDED : டிச 20, 2024 04:04 AM
புதுச்சேரி: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நடத்தும் 23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் மிசோரம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 356 ரன்கள் குவித்தது.
புதுச்சேரி அணியின் நேயம் காங்கேயன் 83 ரன், சாய் ஹரிராம் 79, கவுதம் 72, நிதின் பிரணவ் 56, ஜஸ்வந்த் 53 ரன் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய மிசோரம் அணி 40 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புதுச்சேரியின் ஷிஷீர் மற்றும் அர்ஷில் ராஜேந்திரா தலா 3 விக்கெட் எடுத்தனர். அர்ஷில் ராஜேந்திரா ஹட்ரிக் எடுத்தது குறிப்பிடத்தக்கது.