/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சயீத் முஸ்டாக் அலி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி
/
சயீத் முஸ்டாக் அலி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி
ADDED : நவ 30, 2024 05:00 AM

புதுச்சேரி : விசாகப்பட்டினத்தில் நடந்த சயீத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், சயீத் முஸ்டாக் அலி கோப்பைக்கான ஆண்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த புதுச்சேரி மற்றும் ஒடிசா அணிகளுக்கான போட்டி மழையின் காரணமாக 6 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய புதுச்சேரி அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 91 ரன்கள் விளாசியது.
அருண் கார்த்திக் 15 பந்துகளில் 35 ரன், அஜய் ரோஹேரா 10 பந்துகளில் 21 ரன், ஆகாஷ் கார்கவே 8 பந்துகளில் 22 ரன் அடித்தனர். அடுத்து ஆடிய ஒடிசா அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 75 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தனர். புதுச்சேரி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுச்சேரியின் அருண் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.