/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில கைப்பந்து போட்டி புதுச்சேரி அணிகள் வெற்றி
/
மாநில கைப்பந்து போட்டி புதுச்சேரி அணிகள் வெற்றி
ADDED : அக் 31, 2024 05:45 AM
புதுச்சேரி : மாகியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் புதுச்சேரி அணிகள் முதல் மற்றும் 3வது இடம் பிடித்தது.
புதுச்சேரி விளையாட்டு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் 4 மண்டலம், காரைக்காலில் 2, மாகி, ஏனாமில் தலா ஒர மண்டலம் உள்ளது. மண்டல அளவில் தேர்வாகும் அணிகளுக்கு, மாநில அளவிலான போட்டி, மாகியில் கடந்த 26 மற்றும் 27 ம் தேதி நடந்தது.
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், புதுச்சேரி 2வது மண்டலம் அணி முதல் பரிசும், காரைக்கால் அணி 2வது பரிசும், 4வது மண்டலம் அணி 3வது பரிசு வென்றது.
வெற்றி பெற்ற அணியை உடன் சென்ற ஆசிரியை வினோதினி, ஆசிரியர்கள் முரளி, சதிஷ் வாழ்த்தி பாராட்டினர்.

