புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்வரும் 14ம்தேதி ‘ஸ்பாட் அட்மிஷன்’ அறிவிப்பு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்வரும் 14ம்தேதி ‘ஸ்பாட் அட்மிஷன்’ அறிவிப்பு
ADDED : ஆக 11, 2026 10:14 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பி.ஜி., படிப்புகளுக்கான இறுதிக்கட்ட மாப் அப் ஸ்பாட் அட்மிஷன் சேர்க்கை வரும் 14-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., சயின்ஸ் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகள் நிறைவடைந்த நிலையில், காலியாக உள்ள சில இடங்களை நிரப்புவதற்காக இந்த இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
புதுச்சேரியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி., சயின்ஸ் டெக்னாலஜி ஆகிய படிப்புகளிலும் சேரலாம்.பிற மாநில விண்ணப்பதாரர்கள் எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., சயின்ஸ் டெக்னாலஜி படிப்பில் மட்டும் சேர முடியும். இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் இந்த நேரடிச் சேர்க்கை முகாமில் நேரடியாகக் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் அனைத்து அசல் மதிப்பெண் பட்டியல்கள், சான்றிழ்கள், அண்மையில் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒரு செட் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் வழியாக முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு நடைபெறும் நேரம், இடம் மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்களை அறிய www.pgacpdy.in என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழக இணையதளத்தின் பார்க்கலாம் என முதுகலைச் சேர்க்கைக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
