/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

ADDED : ஏப் 18, 2025 04:07 AM
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில், கடந்தாண்டு ஜூன் 20ம் தேதி, முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் மீது இதுவரை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் புதுச்சேரி அரசு தீர்வு காணவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி நடந்த சங்க பொதுக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, கவர்னர்ஸ் குழுமம் அமைக்கப்படாதது, சி.ஏ.எஸ்., ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயர்வு, பொறுப்பு பதிவாளர் நியமனத்தில் முறைகேடு, பணியாளர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பல்கலைகழக நிர்வாகத்தை சீர்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கம் போராட்ட நடவடிக்கைகள் அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு, வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அலுவலக முன் கவன ஈர்ப்பு போராட்டம், 24ம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்ட நடவடிக்கைககளை அறிவித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம், அரசும் இணைந்து உடனடி தீர்வு வழங்க வேண்டும் என சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.