தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : செப் 09, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தொலைதொடர்பு மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான நோக்கியா இந்தியாவுடன், தொழில்துறை மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோக்கியா இந்தியா, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பொறியியல் பாடத்திட்ட மேம்பாட்டில் தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் பங்களிக்கிறது. பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழுவில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்று, பாடத்திட்டங்கள், தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும். தொழில்துறைத் தேவைகளுக்கும் ஏற்ப உதவுவார்கள்.

மேலும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடுகளில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்பார்கள். இதன் மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நோக்கியாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஒப்பந்தம் குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் கூறுகையில், நோக்கியாவுடன் கூடிய ஒப்பந்தம் மூலம் எங்கள் பாடத்திட்டத்தை பலப்படுத்துவதோடு, மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்துடன், வகுப்பறை மற்றும் நடைமுறை இடையிலான இடைவெளியை நீக்கும். முனைவர் பட்ட படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு நோக்கியா பயிற்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. பி.டெக் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, தொடர்பியல் பொறியியல் மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஒப்பந்தத்தின் போது, கணினி பொறியியல் துறைத் தலைவர் செல்வராஜூ, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குநர் விவேகானந்தன், கல்வி மற்றும் கல்வித் புதுமை இயக்குநர் ஸ்ரீநாத், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப டீன் நித்யானந்தன்.

நோக்கியா இந்தியா சார்பில் சிவசைலம், ரங்ககிருஷ்ணன், தலைமையாளர், சந்தோஷ், கல்யாணசுந்தரம் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us