/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - திருப்பதி ரயில் பயணம் குறிப்பிட்ட பகுதியில் சேவை ரத்து

ADDED : டிச 25, 2024 05:20 AM
புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் திருப்பதி இடையிலான ரயில் பயணத்தில் குறிப்பிட்ட பகுதியில் இன்றும், நாளையும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் இன்று மாலை 3:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு புறப்படும், மெமு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16112) ரேணிகுண்டா வரை மட்டுமே செல்லும். அந்த பகுதியில் இருந்து திருப்பதி வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல திருப்பதி யில் இருந்து புதுச்சேரிக்கு நாளை காலை 4:00 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (எண்: 16111) ரேணிகுண்டா வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 4:40 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரியை வந்தடையும்.
இந்த தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.