நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகம். ஆனால், புதுச்சேரியில் இருந்து தேனிக்கு நேரடியாக ரயில் சேவை இல்லை. சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் அந்தோதையா, குருவாயூர் எக்ஸ்பிரஸ், செந்துார் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மதுரை சென்று அங்கிருந்து 84 கி.மீ., துாரத்தில் உள்ள தேனிக்கு லோக்கல் ரயில் அல்லது பஸ்கள் மூலம் செல்லலாம்.
புதுச்சேரியில் இருந்து தேனிக்கு நேரடியாக செல்லும் ஆம்னி பஸ்கள் விபரம்:
1. கும்கும் டிராவல்ஸ் - இரவு 9:30 மணி
2. எஸ்.பி.எம்., - இரவு 10:00 மணி
3. வெற்றி டிராவல்ஸ் - இரவு 11:00 மணி
4. பி.கே.ஆர். டிராவல்ஸ் - இரவு 9:45 மணி