/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் மகளிர் பிரிவில் புதுச்சேரி முதலிடம்
/
ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் மகளிர் பிரிவில் புதுச்சேரி முதலிடம்
ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் மகளிர் பிரிவில் புதுச்சேரி முதலிடம்
ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் மகளிர் பிரிவில் புதுச்சேரி முதலிடம்
ADDED : டிச 11, 2025 05:12 AM

புதுச்சேரி: கேரளாவில் நடந்த தென் மண்டல அளவிலான ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் சிறுமியர் பிரிவில் முதல் இடத்தையும், சிறுவர் பிரிவில் 2ம் இடத்தையும் பிடித்தனர்.
டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 8வது தென்மண்டல அளவிலான ஜூனியர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கேரளாவில் நடந்தது.இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சிறுவர், சிறுமியர் அணிகள் பங்கேற்றன.
புதுச்சேரி சார்பில், டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி செயலாளர் ரத்தன பாண்டியன் தலைமையில் சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் கலந்து கொண்டன.
சிறுவர் அணிக்கு மதன் கோபால், சிறுமியர் அணிக்கு ஜெசிமாள் பயிற்சியாளர்களாக செயல்பட்டனர்.
இப்போட்டியினை கேரள மாநில குழுத் தலைவர் நிகில் கொடியத்துார், சகாதேவன் துவக்கி வைத்தனர்.
சிறுவர், சிறுமிகளுக்கு என தனித்தனியாக நடந்த போட்டிகளில் சிறுமியர் இறுதி போட்டியில் புதுச்சேரி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
சிறுவர்களுக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடத்தையும், புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாலக்காடு நகராட்சித் தலைவர் பிரமிளா சசிதரன் கோப்பையை வழங்கினார்.

