/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவில் சர்வீஸ் கால்பந்து போட்டி ஆந்திராவை வீழ்த்திய புதுச்சேரி
/
சிவில் சர்வீஸ் கால்பந்து போட்டி ஆந்திராவை வீழ்த்திய புதுச்சேரி
சிவில் சர்வீஸ் கால்பந்து போட்டி ஆந்திராவை வீழ்த்திய புதுச்சேரி
சிவில் சர்வீஸ் கால்பந்து போட்டி ஆந்திராவை வீழ்த்திய புதுச்சேரி
ADDED : டிச 11, 2025 05:13 AM

புதுச்சேரி: அகில இந்திய சிவில் சர்வீஸ் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆந்திராவை வீழ்த்தி புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய சிவில் சர்வீஸ் கால்பந்து விளையாட்டு போட்டிகள் கோவாவில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் புதுச்சேரி - ஆந்திரா அணிகள் மோதின. புதுச்சேரி அணியின் கேப்டன் முருகானந்தம் ஒரு கோல், ராமச்சந்திரன் 2 கோல்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். பிரவீன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஆந்திரா அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்தனர்.
அதனையொட்டி, புதுச்சேரி அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற புதுச்சேரி அணி வீரர்களை, அணியின் மேலாளர் ராமலிங்கம் , பயிற்சியாளர் துரை ஆகியோர் வாழ்த்தினர்.