/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 11, 2025 05:14 AM

பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஏ.ஜி., பத்மாவதி செவிலியர் கல்லுாரி சார்பில் நடந்த புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அமலி முன்னிலை வகித்தார்.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல் மருத்துவர் தேவி,செவிலியர் கல்லுாரி உதவி பேராசிரியை அங்கயற்கண்ணி, செவிலியர் ரேஞ்சர் பென் ஆகியோர் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து, புகையிலை விழிப்புணர்வு பொம்மலாட்டம் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. விரிவுரையாளர் தனுஷ்,பொம்மலாட்டம் மற்றும் நடன நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தினார்.
ஆசிரியை சுதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

