தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் புதுச்சேரி ரயில் பாதியில் நிறுத்தம்

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் புதுச்சேரி ரயில் பாதியில் நிறுத்தம்

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் புதுச்சேரி ரயில் பாதியில் நிறுத்தம்


ADDED : செப் 19, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கனமழையால் தண்டவாளத்தில் மரம் விழுந்து புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் உள்ளூர் மின்சார ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் நேற்று இரவு திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 7:50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு பயணிகளுடன் வழக்கமான பயணிகள் மின்சார ரயில் எண் – 6606 அரும்பார்த்தபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, தண்டவாளத்தில் மரம் ஒன்று விழுந்து கிடந்ததை லோகோ பைலட் பார்த்து, ரயிலை நிறுத்தியுள்ளார். உடனடியாக லோகோ பைலட் மற்றும் ரயிலில் வந்த சிலருடன் இணைந்து தண்டவாளத்தில் இருந்த மரத்தை அகற்றிவிட்டு, ஐந்து நிமிடம் தாமதத்திற்கு பிறகு ரயில் விழுப்புரம் புறப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us