தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
ADDED : செப் 19, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கேரளாவில் நடந்த தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சியில் புதுச்சேரி வீரர் முதலிடம் பிடித்தார்.
புதுச்சேரியில் சென்ற ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்கள், கேரளா மாநிலம் திருச்சூரில் ஆறு மாத காலம் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். இதில், புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் சுகுமார் முதலிடம் பிடித்து ஆல் ரவுண்டர் விருது பெற்றார். விருதினை கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா வழங்கினார். நிகழ்ச்சியில் கேரளா மாநில தீயணைப்பு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
