/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
206 இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு புதுச்சேரி பல்கலை., அறிவிப்பு
/
206 இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு புதுச்சேரி பல்கலை., அறிவிப்பு
206 இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு புதுச்சேரி பல்கலை., அறிவிப்பு
206 இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு புதுச்சேரி பல்கலை., அறிவிப்பு
ADDED : செப் 11, 2025 03:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 206 இடங்களுக்கு வரும் 17ம் தேதி நேரடியாக கலந்தாய்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு காலியிடங்கள் கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், 21 வகையான படிப்புகளில் 206 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான நேரடி கலந்தாய்வு வரும் 17ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில், காலை 10:00 முதல் 12:00 மணி வரை நடக்க உள்ளது. கலந்தாய்விற்கு ஆன்லைனில் ரிப்போர்ட் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நேரடியாகவே கலந்தாய்விற்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.டெக்., எனர்ஜி சயின்ஸ் டெக்னாலஜி, பி.டெக்., மெட்ரீயல் சயின்ஸ், டெக்னாலஜி படிப்புகளை பொருத்தவரை கலந்தாய்வு முறையில் புதிய முன்னுரிமை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 படிப்புகளில் காலியாக பொது பிரிவு-17 ஓ.பி.சி., -61, எஸ்.சி.,-49, எஸ்.டி.,-38, இடபுள்யூ.எஸ்.,-28, மாற்றுதிறனாளி-13 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என, புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.