/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலையில் முதுகலை படிப்பிற்கு ஜன., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
/
புதுச்சேரி பல்கலையில் முதுகலை படிப்பிற்கு ஜன., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி பல்கலையில் முதுகலை படிப்பிற்கு ஜன., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி பல்கலையில் முதுகலை படிப்பிற்கு ஜன., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 08, 2024 04:55 AM
புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு கியூட் (பி.ஜி) - 2024ன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேரலாம்.
இதற்கான இணைய வழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளம் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.எனவே, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 2024-25ம் கல்வியாண்டில் முதுகலைப் பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்புவோர் கியூட் (பி.ஜி) நுழைவு தேர்வுக்கு https://pgcuet.samarth.ac.in எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ எனும்பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நுழைவு தேர்வுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வு தாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
மேலும், தகவல்களுக்கு https://pgcuet.samarth.ac.inஎனும் என்.டி.ஏ.வின் வலைத்தளத்தை தவறாமல் பார்க்கவும்.பல்வேறு முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிக்க வரும் 24ம் தேதி இறுதி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 27 முதல் 29ம் தேதி வரை கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மார்ச் 4ம் தேதி தேர்வு மைய விபரங்களையும், அட்மிட் கார்டுகளை மார்ச் 7ம் தேதியும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவு தேர்வுகள் மார்ச் 11 முதல் மார்ச் 28ம் தேதி வரை நடக்கும். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் வெளியிடப்படும். சந்தேகத்திற்கு 01140759000 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.