/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலை தர வரிசை பட்டியலில் முன்னேற்றம்
/
புதுச்சேரி பல்கலை தர வரிசை பட்டியலில் முன்னேற்றம்
ADDED : நவ 11, 2025 06:36 AM
புதுச்சேரி: ஆசிய அளவில் பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி திறன் மற்றும் சர்வதேச ஈடுபாடு, 2026 ஆண்டுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம், முன்னேறியுள்ளது.
இந்த தரவரிசை, கல்வி சார் நற்பெயர், பணி ஆராய்ச்சி திறன் மற்றும் சர்வதேச ஈடுபாடு, ஆசிரியர்கள், மாணவர்களின் விகிதம் உள்ளிட்ட அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை வெளியிட்டு வருகிறது.
ஆசிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 526 பல்கலைக்கழகங்களில், புதுச்சேரி பல்கலைக்கழகம் 30.7 மதிப்பெண்கள் பெற்று, 2026ம் ஆண்டிற்கான தரிவரிசையில், 470வது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 18.8 மதிப்பெண்களுடன் 520 தரவரிசையில் இருந்து முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதே போல, தெற்காசியாவில் தரவரிசையில் 140வது இடத்தில் இருந்து 121வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பங்களித்த ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை, பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு பாராட்டினார்.
இத்தகவலை பல்கலை துணைப் பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

