தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி


UPDATED : அக் 14, 2026 09:10 PM

ADDED : அக் 14, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:10 PM ADDED : அக் 14, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சண்டீகரில் நடந்த ஒரு நாள் வினு மான்கட் கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணியை விழ்த்தி, 2 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணி வெற்றி வெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் ஒரு நாள் வினு மான்கட் கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

அதன்படி, சண்டீகர் நகரில் நேற்று நடந்த போட்டியில் விதர்பா அணி– புதுச்சேரி அணியும் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் ஸ்ருஜன் மற்றும் பாதல் ராவத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

242 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புதுச்சேரி அணி 50வது ஓவர் கடைசி பந்தில் 8 விக்கெட் இழந்து 242 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

புதுச்சேரி அணியின் ஹாரிஸ் மரைக்கார் 61 பந்துகளில் 58 ரன்களும், சைலேஷ் வைத்தியநாதன் 101 பந்துகளில் 84 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். புதுச்சேரி அணியின் சைலேஷ் வைத்தியநாதன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த தொடரில் ஜம்மூ காஷ்மீர் அணியையும், கோவா அணியையும் வீழ்த்தியதுடன் நேற்று பலம் வாய்ந்த விதர்பா அணியையும் வீழ்த்தி தொடர் வெற்றிகளை புதுச்சேரி அணி குவித்து வருகிறது. புதுச்சேரி அணிக்கு கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிறுவனர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us