வருமான வரித்துறை பயிற்சி முகாம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
வருமான வரித்துறை பயிற்சி முகாம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு
UPDATED : அக் 14, 2026 09:10 PM
ADDED : அக் 14, 2026 08:56 PM

புதுச்சேரி: வருமான வரித்துறை சார்பில் நடந்த ‘கர்மயோகம்: மன அழுத்தமற்ற பணிச் சூழலுக்கான ஒரு கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான பயிற்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
வருமான வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் சார்பில், ‘கர்மயோகம்: மன அழுத்தமற்ற பணிச் சூழலுக்கான ஒரு கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான பயிற்சி நேற்று நடந்தது.
ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் முதன்மை தலைமை ஆணையர் சுனில்பாஜ்பாய் தலைமை தாங்கினார்.
கவர்னர் கைலாஷ்நாதன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மன அழுத்தம் குறித் உளவியல் புரிதல், பணி மற்றும் வாழ்க்கை குறித்த யோகக் கண்ணோட்டம், பலன்களில் பற்று வைக்காமல் கடமைகளை சிறப்பாக செய்யும் அணுகுமுறை, பணியை உயர்ந்த அர்பணிப்பு என்ற நிலைக்கு உயர்த்துதல், தொழில் முறை மற்றும் தனிப்பட்ட சவால்களை கையாள்வதற்கான நடைமுறைக்கு ஏற்ற நான்கு படிநிலை கொண்ட கட்டமைப்பை விளக்குவதாக அமைந்தது.
நிகழ்ச்சியை புதுச்சேரி வருமான வரித்துறை உதவி ஆணையர் அனுப்பிரியா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்பழகன் செய்திருந்தார்.
