UPDATED : அக் 14, 2026 08:20 PM
ADDED : அக் 14, 2026 08:18 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக்கூடத்தில் சோலார் மின் இணைப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை அமைச்சர் சிவக்கொழுந்து துவக்கி வைத்து, திட்டங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிப்பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் பவித்ரன் ஆகியோர் சோலார் மின் இணைப்பு வழங்குமுறை, அதற்கான திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
