பாண்டி மெரினா மணலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் வேன் மீட்பு
பாண்டி மெரினா மணலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் வேன் மீட்பு
UPDATED : அக் 14, 2026 09:08 PM
ADDED : அக் 14, 2026 08:18 PM
புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரை மணலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளின் வேனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் பயணித்த வேன், பாண்டி மெரினா கடற்கரை மணற்பரப்பில் சென்றபோது, சிக்கி கொண்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். தகவலறிந்த, புதுச்சேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணலில் சிக்கிய வேனை பத்திரமாக மீட்டு மீண்டும் சாலை பகுதிக்குக் கொண்டு வந்தனர்.
கடற்கரை மணல் பகுதியில் வாகனங்கள் செல்ல கூடாது என போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளன. அதனை மீறி மணற்பகுதியில் வேன் சென்றதால் மணலில் சிக்கி கொண்டது.
எனவே, புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் போலீசார் மூலம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, தடை அறிவிப்புகளை பின்பற்ற வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
