ADDED : அக் 29, 2026 11:05 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சீனியர் மகளிருக்கான டி–20 போட்டிகள் நடந்து வருகிறது.
புனே நகரில் நேற்று (அக்.,28) நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், ஜார்கன்ட் அணியும் மோதின.
முதலில் களமிறங்கிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் கவிஷா 48 பந்துகளில் 71 ரன்களும், மான்சி 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய ஜார்கன்ட் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் இருந்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின், வி.ஜெ.டி., முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி அணியின் கவிஷா ஆட்டநாயகி விருதை வென்றார்.
