/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய அளவில் லோக்சபா தேர்தலில் 53.03 சதவீதம் ஓட்டளித்து புதுச்சேரி பெண் வாக்காளர்கள் முதல் இடம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
/
இந்திய அளவில் லோக்சபா தேர்தலில் 53.03 சதவீதம் ஓட்டளித்து புதுச்சேரி பெண் வாக்காளர்கள் முதல் இடம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
இந்திய அளவில் லோக்சபா தேர்தலில் 53.03 சதவீதம் ஓட்டளித்து புதுச்சேரி பெண் வாக்காளர்கள் முதல் இடம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
இந்திய அளவில் லோக்சபா தேர்தலில் 53.03 சதவீதம் ஓட்டளித்து புதுச்சேரி பெண் வாக்காளர்கள் முதல் இடம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
ADDED : டிச 31, 2024 06:19 AM
புதுச்சேரி: கடந்த லோக்சபா தேர்தலில் நாட்டிலேயே புதுச்சேரி பெண் வாக்காளர்கள் அதிகளவு ஓட்டளித்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளனர் என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியின் மொத்த வாக்காளர்களில் 53.03 சதவீம் பெண் வாக்காளர்கள் ஓட்ளித்து நாட்டின் முதல் இடத்தில் உள்ளனர்.
மாகே சட்டசபை தொகுதிகளில் 31 ஓட்டுச்சாவடிகளும் முழுக்க பெண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைமுறைகள் பற்றி விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பதிவு வாக்காளர்கள்
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 9,73,161 லட்சம் பேர் ஓட்டளித்திருந்தனர். 2024 லோக்சபா தேர்தலில் 10,23,699 லட்சம் பேர் ஓட்டளித்தனர். இது கடந்த 2019 லோக்சபா தேர்தலை ஒப்பிடும்போது இது 5.19 சதவீதம் அதிகம்.
ஓட்டு சதவீதம்
2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 7,90,895 லட்சம் பேர் ஓட்டளித்த சூழ்நிலையில், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் 8,11,432 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். 2019 லோக்சபா தேர்தலை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4,29,685, மூன்றாம் பாலினத்தவர்-105 என 8,11,432 லட்சம் பேர் ஒட்டளித்தனர்
தபால் ஓட்டுகள்
2019 லோக்சபா தேர்தல் 643 பேர் தபால் ஓட்ட்டு பதிவு செய்திருந்தனர். இது 2024 லோக்சபா தேர்தலில் 3,708 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவை பொருத்தவரை கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 12,199 பேர் ஓட்டளித்து இருந்த சூழ்நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் 9,763 பேர் ஓட்டளித்து இருந்தனர். மூன்றாம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளித்ததில் இந்திய அளவில் புதுச்சேரி, பெண் வாக்காளர்களில் மிக உயர்ந்த சதவீதத்தை பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில் 5,13,799 லட்சம் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்திருந்தினர். 2024 லோக்சபா தேர்தலில் 5,42,979 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.
இது 5.67 சதவீதம் அதிகமாகும். இந்தியா தேர்தல் ஆணையத்தின் லோக்சபா தேர்தல் தரவுகள் https://www.eci.gov.in/statistical-reports என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.