தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதல்வருக்கு சாமானியனின் மனம் திறந்த மடல் இப்படியே போனால் தாங்காது புதுச்சேரி

முதல்வருக்கு சாமானியனின் மனம் திறந்த மடல் இப்படியே போனால் தாங்காது புதுச்சேரி

முதல்வருக்கு சாமானியனின் மனம் திறந்த மடல் இப்படியே போனால் தாங்காது புதுச்சேரி


ADDED : நவ 01, 2026 03:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 03:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம்,

நம்ம புதுச்சேரி இன்னைக்கு உலகளவுலயும், இந்தியா முழுசும் இருக்கிற சுற்றுலா பயணிகளை ஈர்க்கிற ஒரு சொர்க்க பூமியா மாறியிருக்குன்னு கேட்கும்போது உண்மையிலேயே ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் தான் இருக்கு அய்யா...

ஆனா, அந்த சந்தோஷத்தை எங்களால முழுசா அனுபவிக்க முடியுதான்னு கேட்டா... கண்டிப்பா இல்லைன்னு தான் அய்யா சொல்லணும். அந்தப் பெருமைக்கு பின்னாடி நாங்க அனுபவிக்கிற அவஸ்தையையும், இந்த நெரிசலைத் தாங்குற அளவுக்கு நம்ம புதுச்சேரி ரெடியா இருக்காங்குறதையும் நினைச்சா மனசுக்குள்ள பெரிய கேள்விக்குறியாத்தான் இருக்கு.

அய்யா, இன்னைக்கு எங்களால எந்த ரோட்லயும் நிம்மதியா போக முடியல. எந்த தெருவுல திரும்பினாலும் ஒரே டிராபிக் ஜாம். வண்டிங்க ஊர்ந்து கூட போக முடியாம நிற்குது. இந்த நெரிசலை சரி பண்ண எந்த வழியுமே இல்லை; அதை கட்டுப்படுத்த ரோட்டுக்கு நாலு போலீஸ்காரங்க கூட இல்லாத நிலைமை தான் இருக்கு.

வீட்டை விட்டு வெளியே வந்து, சும்மா தெரு முனையை தொட்டுட்டு திரும்பி வீட்டுக்கு வர்றதுக்குள்ள குறைஞ்சது 1 மணி நேரம் ஆயிடுது. சாதாரணமா வெளியே போயிட்டு வர்றவங்களுக்கு கூட பிபி எகிறிடுது. ஏதோ ஒரு சில ரோடு மட்டும் இருந்தா பரவாயில்லை... ஊர்ல இருக்குற எல்லா வீதியும் இதே நிலைமை தான்.

எங்களை மாதிரி சாதாரண மக்களுக்கு தினமும் இது ஒரு பெரிய போராட்டமாவே மாறிடுச்சு. புதுச்சேரி எந்தளவுக்கு வெளி ஆளுங்களோட கவனத்தை ஈர்த்திருக்கோ, அந்தளவுக்கு நெரிசலும் கைமீறி போயிட்டு இருக்குங்கிறது தான் கசப்பான உண்மை.

இதே நிலைமை தொடர்ந்து போச்சுன்னா, இந்த பாரத்தை நம்ம புதுச்சேரியால தாங்கவே முடியாது அய்யா.. எப்பவுமே மக்களோடு மக்களா இருந்து, எங்களோட கஷ்ட நஷ்டங்களை பக்கத்துல இருந்து பார்த்தவர் நீங்க. அதான் உங்ககிட்ட எங்களோட இந்த வலியை நேரடியா பேசணும்னு தோணுச்சு:

அடுத்த 50 வருஷத்துக்கான யோசனை வேணும். அடுத்த 50 வருஷத்துல புதுச்சேரி எப்படி இருக்க போகுது? அப்ப வர்ற மக்கள் தொகையையும் டூரிஸ்டுகளையும் நாம எப்படி சமாளிக்க போறோம்னு இப்பவே யோசிச்சு ஒரு தெளிவான திட்டம் போட்டாகணும் அய்யா.

குறிப்பா, பிளைஓவர் பார்க்கிங் வசதியும் வேணும். டிராபிக் அதிகமா இருக்குற இடங்களை ஆய்வு பண்ணி, எங்கெல்லாம் புதிய மேம்பாலம் கட்டலாம், எங்கெல்லாம் மல்டி லெவல் பார்க்கிங் கொண்டு வரலாம்னு பார்த்து உடனே முடிவெடுக்கணும்.

மக்கள் இப்ப ரொம்ப மாறீட்டாங்க அய்யா. பழசு மாதிரி இப்போ மக்கள் சும்மா இலவசங்களை எதிர்பார்த்து காத்திருக்கல. கஷ்டப்பட்டு வேலைக்கு போறாங்க. நாள் முழுக்க உழைச்சுட்டு சீக்கிரமா வீட்டுக்கு போய் சேரனும்னு தான் நினைக்கிறாங்களே தவிர, வேற எதையும் பெருசா எதிர்பார்க்கல.

முதல்ல ரோட்டை சரி பண்ணுங்க. புதுச்சேரிய சிங்கப்பூரா மாத்துறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் அய்யா... முதல்ல இருக்குற ரோட்டை நல்லா போடுங்க. குண்டும் குழியுமா இருக்குற இடங்களை சரி பண்ணி, தேவையான இடத்துல மேம்பாலத்தை கட்டுங்க..

இது ஒன்னு தான் எங்களோட ஒரே எதிர்பார்ப்பு. மக்களோட உணர்வுகளை நல்லா புரிஞ்ச முதல்வர் அய்யா நீங்க, மத்த எல்லா விஷயத்தையும் விட புதுச்சேரியோட சாலை உட்கட்டமைப்புக்கும் டிராபிக் பிரச்னைக்கும் முதலிடம் கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்கணும். எங்களை இந்த நெரிசல் கொடுமையில இருந்து காப்பாத்துவீங்கன்னு நாங்க ரொம்ப நம்புறோம் அய்யா.

தினமும் நெரிசலில் விழி பிதுங்கும்: புதுச்சேரியின் சாமானிய குடிமகன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us