ADDED : அக் 27, 2025 12:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சார்பில் புதுவை சிவம் பிறந்தநாள் விழா சங்க வளாகத்தில் நடந்தது.
சங்க செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். பொருளாளர் அருள்செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், துணைத் தலைவர் ஆதிகேசவனார் தலைமையில் 'மறுமலர்ச்சிக் கவிஞர் புதுவைச் சிவம்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. விஜயலட்சுமி, விசாலாட்சி, திவ்யா, கயல்விழி, மாலதி ராமலிங்கம், விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் கவிதை வசித்தனர். கவிஞர் இளங்கோ மகிழ்வுரை ஆற்றினார்.
விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, புலவர் பூங்கொடி பராங்குசத்திற்கு 50 ஆண்டுகால தமிழ்ப்பணியினை பாராட்டி 'தமிழ் பேரொளி விருது, வழங்கினார்.
பேராசிரியர் அசோகன் சிறப்புரை ஆற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் சிவேந்திரன் நன்றி கூறினார். இதில், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், ஆனந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

