புதுவை தமிழ்ச்சங்கத் தேர்தல் 6 வது முறையாக முத்து தேர்வு
புதுவை தமிழ்ச்சங்கத் தேர்தல் 6 வது முறையாக முத்து தேர்வு
ADDED : செப் 07, 2026 11:14 PM
புதுச்சேரி: புதுவை தமிழ்ச்சங்கத் தேர்தல் முனைவர் முத்து 6-வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2026-2029ம் ஆண்டிற்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கலைமாமணி முனைவர் முத்து தலைமையில் செயல்பாட்டு அணி வேட்பாளர்களாக 11 நபர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தல் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் புதுவை தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் 1189 நபர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையர் வழக்கறிஞர் பிரபாகரன் அறிவித்தார்.
இதில் 795 நபர்கள் வாக்களித்தனர். செல்லதக்க வாக்குகள் 738, செல்லாத வாக்குகள் 57, மொத்தமாக 62 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதில் அதிகபட்சமாக முத்து 681 ஓட்டுகள் பெற்று ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர்களாக பாவலர் திருநாவுக்கரசு, கோதண்டபாணி, செயலர் சீனு.மோகன்தாசு, பொருளாராக பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளராக பொறியாளர் சுரேஷ்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக அருளரசு, ராசா, ஜெயந்தி ராசவேலு, சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மாலை , பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கலைமாமணி முனைவர் முத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
