ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: வேல்ராம்பட்டு, இன்ஜினியர்ஸ் காலனி கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (8ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி, ஜோதி நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், வாரியார் நகர், ஜான்பால் நகர், காயத்ரி நகர், திருப்பூர் குமரன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதியில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
