ரிக் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணுால் மாற்றும் வைபவம்
ரிக் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணுால் மாற்றும் வைபவம்
UPDATED : ஆக 26, 2026 05:59 PM
ADDED : ஆக 26, 2026 05:40 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ஆவணி அவிட்டத்தையொட்டி, ரிக் வேதத்ததை சேர்ந்த பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோடு, வேதாஸ்ரம குருகுலத்தில் நேற்று நடந்தது. காலை 6:00 மணி, 9:00 மணி என, இரண்டு பேட்ச்களாக நடந்த நிகழ்ச்சியில், ராஜா சாஸ்திரிகள் தலைமையில், புதுச்சேரியில் உள்ள ரிக் வேதத்தை சேர்ந்த ஏராளமான பிரமணர்கள் கலந்து கொண்டு பூணுால் மாற்றிக்கொண்டனர்.
இதனைத் தெடார்ந்து, யஜூர் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி, (27ம் தேதி) கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் நடக்கிறது. காலை 5:30 மணி முதல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்ச் வீதம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 98423 27791, 98423 29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
