ADDED : ஆக 26, 2026 05:32 PM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் ரயில் மோதி சலவை தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் காசி,53; சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, நுாறு அடி சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து, விழுப்புரம் நோக்கி ரயில் வந்தது. அருகில் இருந்தவர்கள் இதனை பார்த்து கூச்சலிட்டனர்.
இதனைகண்ட காசி தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க முயன்றார். ஆனால் அதற்குள் ரயில் அவர் மீது மோதி துாக்கி வீசப்பட்டு இறந்தார். தகவல் அறிந்து வந்த உருளையன்பேட்டை போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் மனைவி அலமேலு புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
