/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நடவடிக்கை: நமச்சிவாயம்
/
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நடவடிக்கை: நமச்சிவாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நடவடிக்கை: நமச்சிவாயம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நடவடிக்கை: நமச்சிவாயம்
ADDED : அக் 24, 2024 06:34 AM
புதுச்சேரி: ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு ஒரு வாரத்தில் 145 பேருக்கு பணியாணை வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
சண்முகாபுரத்தில் நவீன சமையல் கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது;
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாள் முட்டை வழங்கியதை, இனி 3 நாள் வழங்கப்படும். இதற்காக சண்முகாபுரம் மற்றும் ஏம்பலம் சமையல் கூடங்கள் ரூ. 38 லட்சம மதிப்பில் சீரமைத்து, புதிய உபகரணங்கள் மூலம் முட்டைகள் அவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு புத்தக்கப் பை மற்றும் காலணிகள் வழங்க டெண்டர் பணி நடந்து வருகிறது. 145 பேருக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி ஆணை ஒரு வாரத்தில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற பட்டாரி ஆசிரியர்களுக்கான தகுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தலைமையாசிரியர்கள் கிரேடு 1, 2 பதவி உயர்வு மற்றும் கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்துநெரிசலை சீரமைக்கும் பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், முதல்வர் அறிவுறுத்தலின்படி, விரைவில் நானும், பொதுப்பணித்துறை அமைச்சரும் இணைந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, சாலைகளை அகலப்படுத்தப்பட உள்ளது.
பா.ஜ., தலைவர் செல்வகணபதி மீதான வழக்கு குறித்த உண்மை தன்மை ஆராய வேண்டும். எங்கள் தலைவர் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. சபாநாயகரிடம், சுயேச்சை எம்.எல்.ஏ., வாக்குவாதத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. அதனை அவர் மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்.
எனக்கும், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது. என் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, கூறிவரும் குற்றச்சாட்டுகள்உண்மையா, பொய்யா என்பதை மக்கள் முடிவிற்கு விட்டு விடுகிறேன்.
இவ்வாறு கூறினார்.

