/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'
/
'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'
ADDED : அக் 07, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, ; சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., விவகாரம் விரைவில் பேசி சரி செய்யப்படும் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்.
அவர் கூறுகையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., அரசை எதிர்த்து போராட்டம் அறிவத்ததை அறிந்து அவரை தொடர்பு கொண்டு, பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம் எனக் கூறினேன். மேலும், அவரது கோரிக்கைகள் குறித்தும், அவரது குறைகளை கட்சி தலைமைக்கும், கூட்டணி தலைமைக்கும் தெரிய படுத்தி உள்ளேன்.
இப்பிரச்னைக்கு கட்சி தலைமை மற்றும் கூட்டணி தலைமையும் விரைவில் தீர்வு காணும் என்றார்.