/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராதா ஆங்கிலப்பள்ளியில் வினாடி வினா
/
ராதா ஆங்கிலப்பள்ளியில் வினாடி வினா
ADDED : ஜன 22, 2026 05:39 AM

புதுச்சேரி: மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப்பள்ளியில், தினமலர் - பட்டம் நாளிதழின்வினாடி வினா போட்டி நடந்தது. இதில், பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.9ம் வகுப்பு மாணவர்கள் தினேஷ்கார்த்தி, 8ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் முதலிடத்தையும், 9ம்வகுப்பு மாணவர்கள் செல்வம், கவிரத்தினம் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார், பொறுப்பாசிரியர் மாலா பாராட்டிபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

