/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
/
மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி
ADDED : பிப் 22, 2024 06:59 AM

புதுச்சேரி : தேசிய புள்ளியியல் துறை, புதுச்சேரி துணை வட்டார அலுவலகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடந்தது.
முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் சீதா தலைமை தாங்கினார். மாநில புள்ளியில் துறை இயக்குநர் சுபா, இணை இயக்குநர் அனிதா பார்த்தசாரதி, சந்திரசேகரன் வழிகாட்டுதல்படி, தேசிய புள்ளியியல் துறை மூலம் மாதிரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டி நடந்தது.
தேசிய புள்ளியியல் துறை புதுச்சேரி துணை வட்டார அலுவலக முதுநிலை அதிகாரி பாலாஜி, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பேசுகையில், 'புள்ளியல் துறை சார்பில், நாடு முழுதும் பல்வேறு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புள்ளியியல் துறை சார்பில் நடத்தப்படும் கணக்கெடுப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார். புள்ளியியல் துறை அலுவலர்கள் பாண்டியராஜ், துபாய் தத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.