ADDED : பிப் 28, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், 'அறிந்ததும் அறியாததும்'என்ற தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை தையல்நாயகி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிரில் வரவேற்றார்.
பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி நடுவராக இருந்து 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய வகையில், வினாடி - வினா நிகழ்ச்சியை நடத்தி, மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மோகன்தாஸ், செல்வி, சத்தியவாணி, தன்வந்திரி, ராஜலட்சுமி, ஆறுமுகம் மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

