/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டையில் 19ம் தேதி ராதா மாதவ திருக்கல்யாணம்
/
லாஸ்பேட்டையில் 19ம் தேதி ராதா மாதவ திருக்கல்யாணம்
ADDED : ஜன 17, 2025 05:59 AM
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதியின் 6ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண மகோத்சவம் நாளை மறுநாள் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
அதனையொட்டி, நாளை 18ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
பகல் 2:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, பஞ்சபதி, உபசார கீர்த்தனை மற்றும் கணேஷாதி தியானம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோத்ஸ்வம் நடக்கிறது.
மறுநாள் 19ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, 9:00 மணிக்கு ஸ்ரீராதா மாதவ கல்யாண மகோத்சவம், 11:30 மணிக்கு மாங்கல்ய தாரணத்தை தொடர்ந்து ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.
திருக்கல்யாண உற்சவத்தை உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் உபன்யாசம் நிகழ்த்துகிறார். வைக்கிறார்.