/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு வருகிறார் ராகுல் தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டம்
/
புதுச்சேரிக்கு வருகிறார் ராகுல் தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டம்
புதுச்சேரிக்கு வருகிறார் ராகுல் தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டம்
புதுச்சேரிக்கு வருகிறார் ராகுல் தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டம்
ADDED : ஜூலை 24, 2025 03:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி காங்., நிர்வாகிகள், டில்லியில் காங்., தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
டில்லி சென்றுள்ள புதுச்சேரி காங்., நிர்வாகிகள் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேசினர்.
அப்போது, காங்., தலைவர் வைத்திலிங்கம், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கட்சி சார்பில், மேற்கொண்ட பணிகளை விளக்கினார்.
மேலும், கட்சியினரை உற்சாகப்படுத்த புதுச்சேரிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனையேற்ற ராகுல், அக்டோபர் மாதத்தில் புதுச்சேரிக்கு வருவதாக கூறினார்.
இரண்டாம் நாளான நேற்று, அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்து, புதுச்சேரியின் அரசியல் நிலவரம், கட்சி செயல்பாட்டை விளக்கினர். பின், புதுச்சேரி அரசு மீது, ஜனாதிபதியிடம் அளிக்க உள்ள ஊழல் புகார் குறித்தும், அதற்கான ஆதாரங்களை அவரிடம் காண்பித்து விளக்கினர். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார் படுத்தும் பொருட்டு புதுச்சேரிக்கு வருகை தருமாறு மாநில தலைவர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
அதனையேற்ற அவர், விரைவில் வருவதாக உறுதியளித்தார்.
இக்குழுவினர், இன்று ஜனாதிபதியை சந்தித்து, புதுச்சேரி அரசின் மீதான ஊழல் பட்டியலை வழங்க உள்ளனர்.