/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் ராகுல் பிறந்த நாள்
/
காரைக்காலில் ராகுல் பிறந்த நாள்
ADDED : ஜூலை 02, 2025 06:54 AM

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் மகிளா காங், சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு மகிளா காங், தலைவி நிர்மலா தலைமை தாங்கினார். எம்.பி.,வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாவட்ட தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். விழாவில் மளிகை பொருட்கள், தையல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., வைத்தியநாதன், இளைஞர் காங், தலைவர் ரஞ்சித், வட்டாரத் தலைவர் மாறன், மாநில துணைத் தலைவர் தேவதாஸ்,மகிளா காங், மாநிலத் தலைவி நிஷா உள்ளிட்ட ஏராளான காங், கட்சியினர் கலந்து கொண்டனர்.