/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில்வே துறை மாநில அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டம்
/
ரயில்வே துறை மாநில அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டம்
ரயில்வே துறை மாநில அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டம்
ரயில்வே துறை மாநில அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டம்
ADDED : மார் 12, 2024 11:57 PM
புதுச்சேரி, : புதுச்சேரி அரசு ரயில்வே துறை மாநில அளவிலான பாதுகாப்புக் குழுவின் கூட்டம், போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் தலைமை தாங்கினார். சென்னை ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், திருச்சி கோட்ட பாதுகாப்பு ஆணையர், மத்திய மற்றும் யூனியன் பிரதேச புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள், மாவட்ட தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் போக்குவரத்து உள்ளிட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், போக்குவரத்து தொடர்பான பிரச்னைகள், பார்க்கிங் வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கஞ்சா கடத்தலை தடுக்கும் பொருட்டு, போலீசார் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். ரயில் நிலையங்களில் திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பான புகார்கள் எளிதாக விசாரிக்க சி.சி.டி.வி., பொருத்த வேண்டும்.
ரயில் நிலையங்களில் பணிபுரியும் கடைக்காரர்கள் மற்றும் போர்ட்டர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் காண்கணிக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

