ரயில்வே மேம்பாலத்தின் சப்வே குடிநீர் குழாய் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே மேம்பாலத்தின் சப்வே குடிநீர் குழாய் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 18, 2026 11:13 PM
புதுச்சேரி: ரயில்வே மேம்பாலம் சப்வேயில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
புதுச்சேரி நுாறடி சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம், அனிதா நகர், காரமணிக்குப்பம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அகிய பகுதிகளுக்கு செல்ல சப்வேவை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியாக இருசக்கர வானங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மழை காலங்களில் சப்வே பகுதியில் அதிகமாக மழைநீர் தேங்கி நிற்பதால் மோட்டார் மூலம் மழைநீரை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சப்வே சுவர் வழியாக செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து, தண்ணீர் அவ்வழியாக செல்பவர்கள் மீது பீச்சி அடித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் எடுத்து செல்லும் மொபைல் போன், வாட்ச் உள்ளிட்ட மின்னனு சாதனங்களில் மீது தண்ணீர் பட்டு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
