ADDED : ஆக 18, 2026 11:13 PM
புதுச்சேரி: பொறையாத்தம்மன் கோவிலில் 100வது ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி, தமிழ்த்தாய் நகர், பொறையாத்தம்மன், தமிழ்த்தாய் நாயகி உடனுறை சாமமூர்த்தீஸ்வரர் கோவிலில் 100ம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 31ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கல் நடந்தது.
கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜை, துர்க்கை பூஜை, கணபதி ஹோமம், 8ம் தேதி சாகை வார்த்தல், மாலை கொடியேற்றம், காப்பு கட்டுதல், கும்பம் படைத்தல் நடந்தது. தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிேஷகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக கடந்த 16ம் தேதி காலை தேர் வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
