/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெல்லித்தோப்பில் மழை பாதிப்பு ஓம்சக்தி சேகர் பார்வை
/
நெல்லித்தோப்பில் மழை பாதிப்பு ஓம்சக்தி சேகர் பார்வை
நெல்லித்தோப்பில் மழை பாதிப்பு ஓம்சக்தி சேகர் பார்வை
நெல்லித்தோப்பில் மழை பாதிப்பு ஓம்சக்தி சேகர் பார்வை
ADDED : அக் 22, 2025 05:32 AM

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் மழை பாதிப்புகளை அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பார்வையிட்டார்.
நெல்லித்தோப்பு தொகுதி, சக்தி நகர், 8வது தெருவில் பொதுப்பணித்துறை பாலம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்துவருவதால், அப்பகுதியில அடைப்பு ஏற்பட்டுள்ளது.மழையின் காரணமாக சக்தி நகர் மற்றும் சத்யா நகர் பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி, வீடுகளில் செல்லும் நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், அப்பகுதிக்கு சென்றுமழை பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அமைச்சர் லட்சுமி நாராயணனை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, பிரச்னை குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர்அறிவுறுத்தலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் வாய்க்கால் அடைப்புகளை பார்வையிட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும், சத்யா நகர் மெயின் ரோட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்க வாய்க்கால் அமைக்க உடனடியாக அமைச்சருடன் ஆலோசித்துநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தொகுதி செயலாளர் வெங்கடேசன், ரமேஷ், நெல்லை ராஜன், பிரபு, தம்பா, வெற்றியழகன், கலா ஆகியோர் உடன் இருந்தனர்.