/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழை நிவாரணம் முகாம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
/
மழை நிவாரணம் முகாம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ADDED : டிச 05, 2024 06:54 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை நிவாரண முகாம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் மழை நிவாரண முகாம்களாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட அரசு பள்ளிகளுக்கு இன்று 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்துார், சின்ன கரையாம்புத்துார், கடுவனுார், கிருஷ்ணாவரம், மணமேடு, செட்டிப்பட்டு, நத்தமேடு ஆகிய பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி, பண்டசோழநல்லுார், பூராணங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, பாகூர் கொம்யூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.