/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேக்கம்
/
ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேக்கம்
ADDED : அக் 22, 2025 11:02 PM

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலைய தண்டவாளத்தில் சூழ்ந்த மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று முன் தினம் இரவு முதல், நேற்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. புதுச்சேரி ரயில் நிலைய தண்டவாளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் நேற்று கொல்கத்தா, ஒடிசா, மும்பை, சென்னை, திருப்பதி உள்பட 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதுச்சேரி வந்தன. இந்த ரயில்கள் திரும்பிச் செல்வதற்கு இன்ஜினை மாற்றி அமைக்கும் பணி தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் பாதிக்கப்படும் என, கருதி, தண்டவாளங்களில் இருந்த மழை நீரை உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது. தொடர்ந்து வழக்கம்போல் இன்ஜின்கள் மாற்றி அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.