தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆக்கிரமிப்பில் சிக்கிய மழைநீர் வடிகால் மீட்பு

ஆக்கிரமிப்பில் சிக்கிய மழைநீர் வடிகால் மீட்பு

ஆக்கிரமிப்பில் சிக்கிய மழைநீர் வடிகால் மீட்பு


UPDATED : அக் 10, 2026 01:50 AM

ADDED : அக் 10, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:50 AM ADDED : அக் 10, 2026 01:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் ஆக்கிரமிப்பில் இருந்த மழைநீர் வடிகால் மீட்கப்பட்டது.

கடலுார்–சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடை, பிரபல ஜூவல்லரி இடையே மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஆல்பர்ட் வினோத் கூறுகையில், ‘பிரபல துணிக்கடை, பிரபல ஜூவல்லரி இடையே மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். ஆக்கிரமிப்பை கண்டறிந்து வடிகால் வாய்க்காலை மீட்க வேண்டுமென, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது.

அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளதை உறுதி செய்தனர். பின், ஜே.சி.பி., மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, இடத்தை மீட்டனர் ’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us