/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கருவி
/
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கருவி
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கருவி
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கருவி
ADDED : ஜூன் 28, 2025 07:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், 1.15 கோடி மதிப்பில், அதிநவீன உயிர்வேதியியல் பகுப்பாய்வு தானியங்கி மருத்துவ கருவியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
இந்த கருவியின் மூலம், பிறந்த சிசுக்களுக்கு மிக குறைந்த ரத்த அளவில், அதாவது, ஒரு மைக்ரோ லிட்டர் ரத்த துளிகளில், உயிர்வேதியியல் பரிசோதனையை செய்ய முடியும். மேலும், பிறந்த குழந்தைகளின் எச்.பி.எப். அளவை மிக துல்லியமாக அறியமுடியும்.
இந்த பரிசோதனை முடிவுகள் மூலம், ரத்த நோய்களான பீட்டா தாலசீமியா, சிக்கில் செல் அனீமியா போன்ற நோய்களை கண்டறிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உதவுகிறது.
தைராய்டு செயல்பாட்டை மதிப்பிடுதல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நிலைமைகள், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை இந்த அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
நிகழ்ச்சியில், ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, நலவழித்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, உயிர்வேதியியல் துறை தலைவர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.