தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜிவ்காந்தி சிக்னலில் விழுந்த விளம்பர தட்டிகளால் அதிர்ச்சி

ராஜிவ்காந்தி சிக்னலில் விழுந்த விளம்பர தட்டிகளால் அதிர்ச்சி

ராஜிவ்காந்தி சிக்னலில் விழுந்த விளம்பர தட்டிகளால் அதிர்ச்சி


ADDED : ஆக 17, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாய்ந்த விளம்பர பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுச்சேரி, ராஜீவ் காந்தி சிக்னல் சுற்றி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விளம்பர பேனர்கள், போக்குவரத்து சிக்னலையே மறைத்து வாகன ஓட்டிகளுக்கு கடும் இடையூறை ஏற்படுத்தி வந்தன.

இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த எச்சரிக்கையை சற்றும் பொருட்படுத்தாதன் விளைவாக, பலத்த காற்றில் அந்த விளம்பர பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் திடீரென பெயர்ந்து சிக்னலின் மீதும் சாலையிலும் சரிந்து விழுந்த.

அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சிக்னலை மறைத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துகள் ஏற்பட்டதால் தான், இந்த ஆபத்தான விளம்பரத்தட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீழே விழுந்த விளம்பரத்தட்டியை உடனடியாக அப்புறப்படுத்தி அகற்றி போக்குவரத்தை  சீர்செய்தனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடும் இந்த அலட்சியப் போக்கைக் கைவிட்டு, சம்பந்தப்பட்ட துறையினர், இனிவரும் காலங்களில் இதுபோன்று சிக்னலை மறைக்கும் விளம்பரத் தட்டிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஆகையால் ராஜீவ்காந்தி சிக்னல் சுற்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அப்புறப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us